Arakattalai Banner
சேவை வழங்கும் கோயில்கள்

0

மொத்த சேவைகள்

0

பூத்தொண்டில் இணைந்தவர்கள்

0

மொத்த யாத்திரைகள்

0

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் சேவைகள் பற்றி மேலும் ஆழமான புரிதலை வழங்கும் சில அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கே உள்ளன.

தென்தில்லை நடராஜப்பெருமானின் அடியேன் , தென்தில்லை செந்தில் ஐயா அவர்கள் திண்டுக்கல் என்னும் திண்டீச்சரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இறைப்பணி செய்துவருகிறார். அடியார்கள் ஒத்துழைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்களுக்கு கும்பாபிசேகம் மற்றும் விழாக்களுக்கு தேவையான பூ மாலைகளை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்பூத்தொண்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும் வழிபாடு குறைந்த ஆலயங்களில் வழிபாட்டை பெருக்குவது.

“போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்” என்று திருவையாறு திருப்பதிகத்தில் அப்பர் பெருமான் பாடியுள்ளார். யார் ஒருவர் பெருமானின் அபிடேகத்திற்கு தேவையான பூவும் நீரும் கொண்டு செல்கிறார்களோ அவர்பின் நானும் செல்வேன் என்று பாடியுள்ளார். தொண்டுகளில் சிறந்தது பூத்தொண்டு.

தேவாரப் பாடல்பெற்ற 30 திருத்தலங்களுக்கு பிரதோச வழிபாட்டிற்கு தேவையான பூ மாலை மற்றும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் தவறாமல் நேரடியாக சென்று கொடுக்கப்படுகிறது. மேலும் உழவாரப்பணி செய்வது, பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, கைலாயவாத்தியம் கற்றுக்கொடுப்பது என எண்ணற்ற பணிகளை அறக்கட்டளையின் மூலம் செய்துவருகிறோம்.

முருகநாயனார் சோழநாட்டில் திருப்புகலூர் என்னும் அற்புதத்திருதலத்தில் அவதரித்தார். நாள்தோறும் இறைவனின் ஆறுகால பூசைக்கும் அவ்வவேளை பூசைக்கேற்ப மார்களை தொடுத்துக்கொடுப்பார்.

மலைமலர், கொடிமலர், நீர்மலர், நிலமலர் என நால்வகை மலர்கள் உள்ளன.

கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் என பலவகை மலர்மாலைகள் உள்ளன.

சமீபத்திய தகவல்கள்

THEVARA PAADALPETRA SIVALAYA YATHIRAI (THEVARA VARISAIPADI)

யாத்திரை தேதி 06.02.26 முதல் 08.02.26 வரை மூன்று நாட்களில் 32 திருக்கோயில்கள் தரிசனம்

தேவார வரிசைப்படி சிவாலய தரிசனம் 

29 Jan 2026
KUMBHABISEGAM

சிவக்கொழுந்தீஸ்வரர் சுவாமி திருகோவில் . திருத்தினைநகர்(எ)தீர்த்தனகிரி,

தேவாரபாடல்பெற்ற தலங்களில் 216 தலமாகவும், நடுநாட்டுதலங்களில் 5 வது தலமாகவும் விளங்ககூடிய திருத்தினைநகர்(எ)தீர்த்தனகிரி, கருத்தடங்கண்ணி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் சுவாமி திருகோவில்,
🪷தல சிறப்பு:- 
சுவாமியே தனது சிவபக்தர் பெருமையை உலகறிய செய்ய பூலோகம் வந்து, நீர் இறைத்து  திணை பயிரிட்ட அற்புத சிவாலயம் இது  இவ்வாலயத்தின் குடமுழுக்கானது வருகின்ற
08.02.2026, ஞாயிற்றுக்கிழமை. விமர்சியாக நடைபெற இருக்கிறது இந்த ஆலயத்திற்கு நமது பூத்தொண்டானதை செய்ய இருக்கிறோம்.

இத்திருத்தலம் சேர்த்து நமது தேவாரத் திருத்தல கும்பாபிஷேக  பூத்தொண்டானது 14 வது கும்பாபிஷேகம் பூத்தொண்டாகும்.

எனவே அடியார்கள், அன்பர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை எப்பொழுதும் போல அளித்திட பாதம் பணிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இங்கனம் 🕉️🌸தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை🌸🕉️ எல்லாம் வல்ல பெருங்கருணை நாயகரின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமாகி பூத்தொண்டில் இணைந்து சிவபுண்ணியம் அடைந்திடுவோம்_ சிவாய நம🕉️🙏🏻 திருச்சிற்றம்பலம் 🤲🏻🕉️🙏🏻
G pay number :+91 96777 74925

02 Feb 2026

எங்கள் செயலியை பதிவிறக்கவும்

வேகமானது, பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது. சிறந்த அனுபவத்தை பெறுங்கள்.

QR Code

Scan QR