பிரதோஷம்

பிரதோஷங்கள் ஐந்து!

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

01 நித்தியப் பிரதோஷம்

ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.

வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை

  • முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
  • இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
  • ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
Arakattalai Banner
அபிஷேக பொருட்கள் வழங்கப்படும் கோவில்கள்

0

மொத்தம் பிரதோஷத்திற்கு செய்த சேவைகள்

0

மொத்தம் பிரதோஷத்திற்கு செய்த செலவு

0

வழங்கப்படும் அபிஷேக பொருட்கள்

பூசைக்கு தேவையான அபிசேகப்பொருட்கள்:

வரிசை எண் பூஜை பொருட்கள் அளவு
1 அம்பாளுக்கு 4 அடி மாலை 1 Nos/Temple
2 அரிசி மாவு 1 kg/Temple
3 இலுப்பை எண்ணெய் 1 lit/Temple
4 நந்தி பெருமானுக்கு 3 அடி மாலை 1 Nos/Temple
5 பன்னீர் 1 lit/Temple
6 சந்தனப் பொடி 1 kg/Temple
7 சிவபெருமானுக்கு 4 அடி மாலை 1 Nos/Temple
8 திருமஞ்சனப்பொடி 1 kg/Temple
9 திருநீறு 1 kg/Temple
10 மஞ்சள் 1 kg/Temple
11 வஸ்திரம் (ஸ்வாமி, அம்பாள் ) 1 Set/Temple
12 வில்வப்பொடி 1 kg/Temple

அபிஷேக பொருட்கள் வழங்கப்படும் கோவில்கள்

தேவாரத் திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை ஏற்பாட்டின் மூலமாக பாடல்பெற்ற 8 திருத்தலங்களுக்கு பிரதோச வாழிபாடு பூசைக்கு தேவையான பூ மாலை மற்றும் அபிசேக பொருட்கள் வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டதிருத்தலங்கள்:

அக்னீஸ்வரர் கோயில்

1.அக்னீஸ்வரர் கோயில்

புஷ்ப்பவனநாதர் கோயில்

2.புஷ்ப்பவனநாதர் கோயில்

ஆபத்சஹாயேஸ்வரர் திருக்கோயில்

3.ஆபத்சஹாயேஸ்வரர் திருக்கோயில்

ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

4.ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

5.அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் (கீழைத்திருக்காட்டுப்பள்ளி )

6.ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் (கீழைத்திருக்காட்டுப்பள்ளி )

ஆத்மநாதேஸ்வரர் கோயில்

7.ஆத்மநாதேஸ்வரர் கோயில்

கடைமுடிநாதர் திருக்கோயில் (திருக்கடைமுடி )

8.கடைமுடிநாதர் திருக்கோயில் (திருக்கடைமுடி )

அனைவரது ஒத்துழைப்பில் செயல்படுவோம்...

ஈசன்திருவருள் பெறுவோம்...

என்றும் இறைப்பணியில்...

தென்தில்லை செந்தில் 9677774925

அறிவிப்புக்கள்

தரவு கிடைக்கவில்லை