Shodasakalai 2025

சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15. தேய்பிறை திதி 15. இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதி தான் சோடசக்கலை. இது 5 நொடிப்பொழுதுகள் மட்டுமே இருக்குமாம். இந்த நேரம் திரிமூர்த்திகளின் ஆளுகைக்குள் இருக்கும். இந்த நேரத்தில் நாம் எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைக்கூடுமாம்.

அதாவது அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகள் முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பும், ஒரு மணி நேரம் பின்பும் ஆக இரண்டு மணி நேரம் சேர்ந்தது தான் சோடச கலை நேரம் ஆகும். இந்த இரண்டு மணி நேரம் தியானம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்ளலாம்.

அதாவது சோடசக்கலை தியானத்தில் இருக்கும் இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஐந்து நொடி மட்டும் தியானத்திலிருப்பவர்களில் ஒரு சிலருக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலித்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்., நினைத்தது நிறைவேறும். அஷ்ட லக்ஷ்மியின் அருளோடு செல்வ வளமும் பெருகும்.

ஐந்து நொடி எப்போது எனத்தெரியாததால் இரண்டு மணி நேரமும் சோடசக்கலை தியானத்தில் இருக்க வேண்டும் . இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அதுவும் அல்லாது தைப்பூசம் என்பது முருகனுக்கு விசேஷமான நாள். மற்ற பல கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இந்த நன்னாளில் வரும் சோடாசக்கலை நேரத்தை தவறவிடாதீர்கள்.

பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம்.

பூஜை அறையில் ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்கு திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். ஏதேனும் ஒரு கோரிக்கை மட்டுமே வைக்க வேண்டும்.அது நிறைவேறிய பின் மற்றொன்றை வேண்டலாம்.

இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.ஒவ்வொருவருக்கும் வெற்றி கிடைக்க காலம் நேரம் வித்தியாசப்படுகிறது.கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து சோடசக்கலை தியானம் செய்ய வேண்டும். கோரிக்கையை மாற்ற நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம். பலன் கிடைக்கும் நேரத்தில் என்ன கோரிக்கை மனதில் வைத்திருக்கிறீர்களோ அந்த கோரிக்கைக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.

Sno Ammavasai/Pournami End Date Shodasakalai Start Date Shodasakalai End Date Shodasakalai Status Description
1 Jan 11th 06:31 PM Jan 11th 05:31 PM Jan 11th 07:31 PM Completed
2 Jan 25th 11:56 PM Jan 25th 10:56 PM Jan 26th 12:56 AM Completed
Sno Ammavasai/Pournami End Date Shodasakalai Start Date Shodasakalai End Date Shodasakalai Status Description