பூத்தொண்டு செய்த அடியார்கள்
சோழநாட்டிலே திருப்புகலூர் எனும் அற்புததிருத்தலத்திலே அவதரித்தவர் முருகனார். சைவசமய நெறியின் தலைநின்ற இப்பெருமானார், இறைவன் திருவடி ஒன்றே தம்பிறவிப்பேறு என்றெண்ணி இறைத்தொண்டை சிரம்மேற்கொண்ட சிவனடியார் ஆவார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்துநீரில் மூழ்கி மலைமலர், கொடிமலர்,நீர்மலர், நிலமலர் எனப்படும் நால்வகை மலர்களைக் கொய்து மலர்க்கூடைகளில் கொண்டுவந்து தனியிடத்தில் வைப்பார். கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல்,தொடையல் எனப்பல வகைப்பட்ட மலர் மாலைகளாகத் தொடுப்பார்.
இறைவனின் ஆறுகாலப் பூசைக்கும் அவ்வவ்வேளை பூசைக்கேற்ப தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்வரதிருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாற்றி தமிழ்மறையால் அருச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபாடுசெய்து வந்தருளினார்.
திருஞானசம்பந்த பெருமானுக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகனார், திருநல்லூர்ப்பெருமணத்தில் நிகழ்ந்த ஞானசம்பந்தபெருமான் திருமணவிழாவில் கலந்துகொண்டு தாங்களும் பெருமானடி நீழலில் தங்கும்நிலைபெற்றார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளும்பெற்றார்.
முருகநாயனார் குருபூசை வைகாசிமாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
முருகநாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

உச்சிநாதர் திருக்கோயில்
பிரதோஷம்
- 16 Jun 2025
- UpComing

பசுபதேஸ்வரர் திருக்கோயில்
ஆடி அமாவாசை
- 20 May 2025
- Completed