சிவாயநம... அன்புடையீர்,
நமது திருக்கூட்டமானது 02.10.2003 அன்று பிரதோஷ தினத்தன்று கருணைக்கடவுள் ஈசன் திருக்கருணையினால் தென்தில்லை செந்தில் அவர்கள் மூலமாக தொடங்கப்பட்டது.
2004ம் ஆண்டு நமது குருநாதர் சிவ திரு.இராமகிருஷ்ணன் ஐயா அவர்களை திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ௧௩ கிலோமீட்டர் எலுமிச்சை மாலை அணிவிக்கும் பணியின்போது சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்பு ஐயாவுடன்சேர்ந்து சிவப்பணிகள் செய்துவந்தோம்.
2005ம் ஆண்டுத் தொடக்கத்தில் சிவ திரு. மாரிமுத்து ஐயா (செம்மடைப்பட்டி) தொடர்பை குருநாதர் சிவ திரு.இராமகிருஷ்ணன் ஐயா ஏற்படுத்தினார்.
04.09.2006ம் ஆண்டு திருக்கூட்டத்திற்கு அருள்தரும் உண்ணாமுலையம்மன் ஆன்மீக அறக்கட்டளை என்று பெயர் சூட்டப்பட்டது அதன் முதல்பணியாக குருநாதர் உத்தரவின் பெயரில் திண்டுக்கல் பாறைமேட்டுத்தெரு பகவதியம்மன் திருக்கோயிலுக்கு உற்சவமூர்த்தி அம்மன் ஐம்பொன்சிலை வழங்கப்பட்டது.
04.06.2007ம் ஆண்டு வெள்ளையம்பட்டியில் அறக்கட்டளையின் முதலாம் கிளை தொடக்கப்பெற்றது.
19.01.2008ம் ஆண்டு பழனி பாதையாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்செய்ய முடிவெடுக்கப்பட்டது அதன்படி மதுரையம்பதியிலிருந்து தென்தில்லை நடராசப்பெருமானின் திருமேனி அழைத்துவரப்பட்டு ஆனந்த திருநடனம் நிகழ்வு நடைபெற்றது இன்றுவரை நடைபெற்றுவருகிறது.
03.02.2009ம் ஆண்டு ஆனிலையப்பர் பெருங்கருணையினால் ஆனிலை சரவணன் ஐயா(கரூர்) தொடர்பு கிடைக்கப்பெற்று அவர்மூலம் சிவகண வாத்தியம் கற்றுக்கொண்டு திண்டுக்கல்லில் முதன்முதலாக தென்தில்லை செந்தில், சிவ.சக்திவேல் (வெள்ளையம்பட்டி) இவர்களால் இசைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
2009ம் ஆண்டு சித்திரை திருவிழாவின்போது திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் (அபிராமிஅம்மன்) திருக்கோயிலில் சங்குநாதம் சிவகண கைலாயவாத்தியம் இசைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை இசைக்கப்பட்டுவருகிறது.
20.01.2016அன்று பெருமானின் பெருங்கருணையினால் திண்டுக்கல்லில் 63 நாயன்மார்களுக்கும் எல்லாம்வல்ல சிவபெருமான் திருக்கயிலாய திருக்காட்சி திருவிழா தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
20.01.2016 அன்று திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் (அபிராமிஅம்மன்) திருக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது நாயன்மார்கள் உற்சவ மூர்த்தி திருமேனிகள் திருக்கூட்டத்தின் அடியார்கள், அன்பர்பெருமக்கள் சார்பாக திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. ஈசன் திருகருணை இதன்படி தொடர்ந்து சிவப்பணிகள் மற்றும் சிவகண கைலாயவாத்திய பணிகள் தொடர்த்துவருகிறது.
21ஆண்டுகளாக தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்புக்கு: தென்தில்லை செந்தில்
9677774925, 84898 82687
93633 02233,98942 70546