Frequently Asked Questions
Here are some of the most frequently asked queries that will provide a deeper understanding of our services.
பூத்தொண்டு அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
தென்தில்லை நடராஜப்பெருமானின் அடியேன் , தென்தில்லை செந்தில் ஐயா அவர்கள் திண்டுக்கல் என்னும் திண்டீச்சரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இறைப்பணி செய்துவருகிறார். அடியார்கள் ஒத்துழைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்களுக்கு கும்பாபிசேகம் மற்றும் விழாக்களுக்கு தேவையான பூ மாலைகளை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்பூத்தொண்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும் வழிபாடு குறைந்த ஆலயங்களில் வழிபாட்டை பெருக்குவது.
பூத்தொண்டின் சிறப்பு என்ன?
“போதொடு நீர்சமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்” என்று திருவையாறு திருப்பதிகத்தில் அப்பர் பெருமான் பாடியுள்ளார். யார் ஒருவர் பெருமானின் அபிடேகத்திற்கு தேவையான பூவும் நீரும் கொண்டு செல்கிறார்களோ அவர்பின் நானும் செல்வேன் என்று பாடியுள்ளார். தொண்டுகளில் சிறந்தது பூத்தொண்டு.
பூத்தொண்டு அறக்கட்டளையின் பணிகள் என்ன?
தேவாரப் பாடல்பெற்ற 30 திருத்தலங்களுக்கு பிரதோச வழிபாட்டிற்கு தேவையான பூ மாலை மற்றும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் தவறாமல் நேரடியாக சென்று கொடுக்கப்படுகிறது. மேலும் உழவாரப்பணி செய்வது, பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, கைலாயவாத்தியம் கற்றுக்கொடுப்பது என எண்ணற்ற பணிகளை அறக்கட்டளையின் மூலம் செய்துவருகிறோம்.
பூத்தொண்டு செய்த நாயன்மார்கள் யார்?
முருகநாயனார் சோழநாட்டில் திருப்புகலூர் என்னும் அற்புதத்திருதலத்தில் அவதரித்தார். நாள்தோறும் இறைவனின் ஆறுகால பூசைக்கும் அவ்வவேளை பூசைக்கேற்ப மார்களை தொடுத்துக்கொடுப்பார்.
மலரின் வகைகள் யாது?
மலைமலர், கொடிமலர், நீர்மலர், நிலமலர் என நால்வகை மலர்கள் உள்ளன.
மலர் மாலையின் வகைகள் யாது?
கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் என பலவகை மலர்மாலைகள் உள்ளன.