நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

63 நாயன்மார்கள் பெயர் மற்றும் பூசை நாள்

அரிவட்டய நாயனார்

அரிவட்டய நாயனார்

  • தை - திருவாதிரை
  • 30 Jan 2026 03:50 AM
  • 31 Jan 2026 02:25 AM
  • அவதாரத்தலம் : கணமங்கலம் 

    முக்தித்தலம்  : தண்டலை நீணெறி

Completed

சண்டேசுவர நாயனார்

சண்டேசுவர நாயனார்

  • தை - உத்திரம்
  • 05 Feb 2026 12:11 AM
  • 06 Feb 2026 01:02 AM
  • அவதாரத்தலம் : திருசேய்ஞலூர் 

     முக்தித்தலம் : திருவாய்ப்பாடி 

Completed

திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்ட நாயனார்

  • தை - விசாகம்
  • 09 Feb 2026 06:30 AM
  • 10 Feb 2026 08:58 AM
  • அவதாரத்தலம் : தில்லை

    முக்தித் தலம் : தில்லைப்புலீச்சரம்

Completed

சக்கிய நாயனார்

சக்கிய நாயனார்

  • மார்கழி - பூராடம்
  • 07 Jan 2026 06:09 AM
  • 08 Jan 2026 09:12 AM
  • அவதாரத்தலம் : திருச்சங்கமங்கை 

                                         (கோனேரிக்குப்பம்)
     

    முக்தித்தலம் : திருச்சங்கமங்கை 

Completed